சினிமா நடிகர்கள் கொண்டாடப்படுகின்றனர். எங்கு சென்றாலும் மாலை, மரியாதை, பொன்னாடை என கவுரவிக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களது குடும்பம், வாழ்க்கை குறித்த தகவல்கள் பெரும்பாலும் வெளியே தெரிவதே இல்லை. பல பிரபலமான நடிகர்கள் தங்களது குடும்பம் குறித்த எந்த தகவலையும் பப்ளிசிடி செய்யாமல் தவிர்க்க பிரைவசி காரணமல்ல. அவர்கள் தங்களது குடும்பத்தை வெளியே மறைக்க ரகசியமான காரணங்களும் இருக்கலாம்.
சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நடிகை அனுபரமி என்பவர் கூறியதாவது, ஆண் நடிகர்கள் வெளியிடங்களுக்கு சென்றால் பல பெண்களுடன் பேசுகின்றனர். பழகுகின்றனர் கைகுலுக்குகின்றனர் கட்டிப்பிடிக்கின்றனர் என்பதெல்லாம் சகஜமாகி விட்டது. ஆனால் 4 சுவர்களுக்குள் முடங்கி கிடக்கும் அந்த நடிகர்களின் மனைவிகள் குறித்து யாருமே சிந்திப்பது இல்லை. அவர்களது வாழ்வாதாரம், அந்தரங்கம், உறவுக்கான மதிப்பு குறித்து கேட்டால் வேதனை தாங்க முடியாது.
15 நாட்கள் ஷூட்டிங் சென்று திரும்பும் பிரபல நடிகர், அந்த பெண்ணின் கணவர், பெட்ரூமுக்குள் சென்றுவிட்டால் 2 நாட்களுக்கு கதவை திறக்க மாட்டார். சாப்பிடுவதற்கு மட்டும் என்ன வேண்டும் என்று ஆர்டர் இன்டர்காமில் வரும். குழந்தைகள் படிப்பு குறித்தும் கேட்க மாட்டார். மனைவியிடம் அன்பாக, அக்கறையாக நடந்துக்கொள்ள மாட்டார்.
வீட்டை பார்த்துக்கொள்கிற, குழந்தைகளை கவனித்துக்கொள்கிற பெண்ணாக மட்டுமே அவர் இருக்கிறார். அவர் யாரிடமாவது பேசி பழகி விட்டால், அவரது கேரக்டர் மோசம் என அந்த கணவரே, மனைவி மீது பழி சுமத்த தயங்கமாட்டார். இப்படி பிரபலமான நடிகர்களின் பல மனைவிகள் பலத்த வேதனை, துன்பங்களில், கவலைகளில் வாழ்ந்து வருகின்றனர். அதை மறக்கத்தான் பியூட்டி பார்லர் செல்வது, வெளியிடங்களுக்கு செல்வது என மனதை தேற்றிக்கொள்கின்றனர் என்று கூறி இருக்கிறார் அனுபரமி.
புதுக்கோட்டை அருகே 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரப் பள்ளத்தில் தலைகுப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்…
ஜப்பான் நாட்டில் உள்ள விலங்கியல் பூங்கா ஒன்றில், பிறந்ததும் தாயால் கைவிடப்பட்டுத் தனிமையிலும் மற்ற குரங்குகளின் தாக்குதலிலும் தவித்து வந்த…
திருவாரூர் மாவட்டம் விளமல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கீழே கிடந்த சுமார் 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான…
பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…
மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…
வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…