CINEMA
பாஸ் என்கிற பாஸ்கரன் பட டீச்சரா இது..? ஆள் அடையாளமே தெரியல.. இப்போ என்ன பண்றாங்கன்னு தெரியுமா..?
சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல் கயல். இந்த சீரியலில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், சஞ்சீவ் கதாநாயகனாகவும் நடிக்கின்றனர் இந்த சீரியலில் கயல் தோழியாக நடிப்பவர் நடிகை அன்னபூரணி.
நடிகை அன்னபூரணியும் சீரியலில் நர்சாக நடிக்கிறார். இவர் பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் பார்வையற்ற ஆசிரியையாக நடித்தது குறிப்பிடத்தக்கதாகும். அந்த படம் மூலமாக பிரபலமான அன்னபூரணி பல சீரியல்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் அன்னபூரணி அளித்த பேட்டியில் கூறியதாவது, புல் டைம் எனக்கு நடிக்கணும்னு இல்ல. ஏன்னா நான் ஒரு சாப்ட்வேர் இன்ஜினியர். தன்னால வாய்ப்பு தேடி வந்தது. அதை பயன்படுத்திக்கிட்டேன். நான் படத்தில் நடிப்பதற்கு அவ்வளவாக ஆர்வம் காட்டியதில்லை.
அதன் பிறகு சீரியல்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன்பிறகு தான் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தேன். சீரியல்களில் கமிட் ஆன பிறகு ஒரு வருடம் அப்படியே போகிறது. நானும் மீடியாவில் இருக்கிறேன் என்ற எண்ணத்தோடு இருக்கிறேன் என கூறியுள்ளார்.