வேலையில்லா பட்டதாரி 2 திரைப்படத்தில் பாலாஜி கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வரும் வசந்த் வசி என்ற தகவல் தற்போது வெளியாகி இருக்கின்றது.
தமிழ் சினிமாவில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமலாபால் நடிப்பில் வெளியான திரைப்படம் வேலையில்லா பட்டதாரி. இந்த திரைப்படத்தின் 2-வது பகுதி 2017 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் முதல் பகுதியில் நடித்திருந்த அதே நடிகர்கள் இதில் நடித்திருந்தார்கள். இது ஒரு ஆக்சன் கலந்த நகைச்சுவை படமாக வெளியானது.
நீண்ட வருடத்திற்கு பிறகு நடிகை கஜோல் நடித்திருந்த தமிழ் திரைப்படமும் இதுதான். 20 ஆண்டுகளுக்கு பிறகு மாஸ் கம்பேக்காக இந்த படத்தில் கஜோல் நடித்திருந்தார். அதற்கு முன்னதாக மின்சார கனவு என்ற திரைப்படத்தில் பிரபுதேவா உடன் இணைந்து நடித்திருப்பார். இந்த படத்தின் இரண்டு பாகங்களுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் இரண்டாவது பாகத்தில் பாலாஜி என்ற கதாபாத்திரத்தில் ஒரு நடிகர் நடித்திருப்பார். அவர் பெயர் பாலாஜி மோகன். இவருக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது குக் வித் கோமாளி மற்றும் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் நடித்து வரும் வசந்த் வசி தான். இதனை ஒரு முறை அவர் பேட்டியில் பகிர்ந்து இருக்கின்றார். பாலாஜி கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சௌந்தர்யா ரஜினிகாந்த் முதலில் வசந்த் வசியை தான் தேர்ந்தெடுத்தாராம்.
அதன் பிறகு ஸ்கிரிப்ட் முடித்துவிட்டு மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு கேரவனிலிருந்து ஷர்ட்க்கு ரெடியாகி வரும் போது அவரை பார்த்தது சௌந்தர்யா பாலாஜி கதாபாத்திரம் ஒரு முக்கியமான கதாபாத்திரம். ஆனால் இவரை பார்க்கும்போது மிகவும் சாதுவாக தெரிகின்றது. அதனால் இவர் வேண்டாம் என்று கூறிவிட்டாராம். பின்னர் அன்று எடுக்கவேண்டிய காட்சி எடுக்காமலே போய்விட்டதாம். அதன் பிறகு தான் பாலாஜி மோகன் அந்த திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை ஒரு பேட்டியில் மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்து இருந்தார் வசந்த் வசி. மேக்கப் எல்லாம் போட்டுவிட்டு ஸ்கிரிப்ட் எல்லாம் படித்து முடித்துவிட்டு ஆகா நாமும் ஒரு படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறோம், இனிமேல் நம் வாழ்க்கையில் ஒரு மாற்றம் இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்று கொண்டிருந்தபோது இந்த படத்தில் நீ இல்லை என்று கூறினால் நம் மனம் எவ்வளவு பாதிக்கப்படும்.
அப்படி ஒரு சூழ்நிலையில் இருந்தேன். வீட்டுக்குப் போய் நான் அன்று முழுவதும் அழுதேன். அந்த படத்தை திரையரங்கில் பார்க்கும்போது என் மனம் மிகவும் வருத்தப்பட்டது. அது எனக்கு மட்டும்தான் தெரியும் என்று கூறியிருந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சமீபத்தில்தான் இவர் எவிட்டாகி இருந்த நிலையில் பாண்டியன் ஸ்டோர் 2 சீரியலில் இரண்டாவது மகனாக நடித்து வருகிறார்.