தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் செந்தில். இவரின் மனைவி தனது கனவு வீட்டை குறித்து பேசியிருந்த வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் பிரபல காமெடி நடிகராக கொடிக்கட்டி பறந்தவர் நடிகர் செந்தில். ஒரு கோயில் இரு தீபங்கள் என்ற திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அறிமுகமான இவர் அதைத்தொடர்ந்து கிளிஞ்சல்கள், மௌன கீதங்கள், இன்று போய் நாளை வா, கோபுரங்கள் சாய்வதில்லை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். ஆனால் இவருக்கு எதிர்பார்த்தபடி நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
அதைத்தொடர்ந்து கவுண்டமணியுடன் காமினேஷனில் இவர் நடித்த அனைத்து காமெடிகளும் சூப்பர் டிப்பர் ஹிட் கொடுத்தது. அதிலும் வைதேகி காத்திருந்தாள், கரகாட்டக்காரன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட ஏராளமான திரைப்படங்களை நாம் கூறலாம். இவர்கள் இருவரின் காமெடியில் வெளியான படங்கள் அனைத்தும் அப்போது மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அதிலும் நடிகர் கவுண்டமணி செந்தில் அடிக்கும் போதெல்லாம் எந்த ஒரு ஈகோவும் பார்க்காமல் சிறப்பாக நடித்திருப்பார்.
அதுதான் அவரை மேலும் பிரபலமாகியது. அதைத்தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் தனியாகவும் நடிக்க தொடங்கிய இவர் பல காமெடி நடிகர்களின் வரவால் சினிமாவை விட்டு விலகினார். நடிகர் செந்திலின் மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது அவரின் வெகுளித்தனமான பேச்சுதான். நம்ம ஊர்க்காரர் என்பவரை போல் நடந்து கொண்ட காரணத்தினால் பலரும் இவரை ஏற்றுக் கொண்டனர்.
நீண்ட இடைவெளிக்கு பிறகு செந்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற சூர்யாவின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு கடைசியாக லால் சலாம் என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். இவரின் மனைவி சமீபத்தில் youtube சேனலுக்கு பேட்டி கொடுத்திருந்தார். அதில் செந்தில் குறித்த பல விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அவர் சினிமாவில் எப்படி இருப்பார் வீட்டில் எப்படி இருப்பார் என்பதை குறித்தும் பேசியிருந்தார்.
மேலும் அவர் கட்டிய வீடு குறித்து தற்போது பேசியிருக்கின்றார். 1987லேயே இந்த வீட்டை கட்டி இருப்பதாக கூறி இருந்தார். அந்த வீடு பார்ப்பதற்கு மிகவும் பிரமாண்டமாக இருந்தது. அந்த வருடத்திலேயே அப்படி ஒரு வீட்டை கட்டி இருக்கின்றார் செந்தில். இதற்கு முன் இருந்த வீட்டில் ஹால் மிகவும் சிறியதாக இருக்கும். வருடா வருடம் இவர் சபரிமலைக்கு மாலை போட்டு பூஜை செய்வார்.
அப்போது யார் வந்தாலும் நிற்கக்கூட இடம் இருக்காது. அதற்காகவே தனது வீட்டில் ஹால் பெருசாக இருக்க வேண்டும் என்று பார்த்து பார்த்து கட்டியதாக கூறியிருந்தார். மேலும் தனது மகன் திருமண ரிசப்ஷனுக்கு ஜெயலலிதா அம்மையார் வந்தது குறித்து பெருமையாக பேசி இருப்பார். அவரின் வீட்டை சுற்றி அவரது மகன்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் அவர்களின் புகைப்படங்கள் அனைத்தையும் மாட்டி வைத்திருந்தார்கள். தனது பேரக்குழந்தைகள் மகன்கள் அனைவரையும் குறித்து பல விஷயங்களை பேசி இருந்தார் செந்தில் மனைவி.