பிரபல தொலைக்காட்சியான ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் கன்னத்தில் முத்தமிட்டால். இந்த சீரியலில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தவர் தான் சந்தோஷ் .குடும்ப பின்னணியை கொண்ட காதல் தொடராக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் இந்தியில் “துஜே ஹை ராப்தா” என்ற தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாகும். இந்த சீரியலை அடுத்து சந்தோஷ் அண்ணா என்ற சீரியலில் நடித்து வந்தார்.

தற்போது இந்த சீரியலில் இருந்து இவர் விலகி படத்தில் நடிப்பதற்கு கவனம் செலுத்தி வருகிறாராம். தற்போது சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும், ‘ரஞ்சனி’ என்ற தொடரில் நடித்து வருகிறார். சினிமாவில் ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் அவர் இன்ஸ்டா பக்கத்திலும் புகைப்படங்களை பதிவிட்டு வருவார் சந்தோஷ்.

அந்தவகையில் திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். தற்போது பிளாக் ஷீப், வீடியோஸ் கனா காணும் காலங்கள் போன்றவற்றில் நடித்து பிரபலமான நடிகையான மௌனிகாவை பல வருடங்களாக காதலித்து வந்துள்ள நிலையில் தற்போது அவருடன் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

நடிகை மௌனிகா சமீபத்தில் வெளியான லப்பர் பந்து படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடைய நிச்சயம் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நடந்த நிலையில் திருமணம் எளிமையாக நடந்தாலும், ரிசப்ஷன் கிராண்டாக நடந்துள்ளதது. இதை தொடர்ந்து ரசிகர்கள் இந்த ஜோடிகளுக்கு தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
View this post on Instagram
