விஷால் இந்த நிலைமையில் இருக்க நான் காரணமா..? ஒரே வார்த்தையில் நச்சுன்னு பத்தி சொன்ன பாலா..!

By Soundarya on தை 20, 2025

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஷால். இவருடைய நடிப்பில் வெளியான சண்டக்கோழி மற்றும் தாமிரபரணி உள்ளிட்ட பல திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டன. தற்போது சினிமாவில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் விஷால் நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் 12 வருடங்களுக்கு முன்பு உருவான மதகஜராஜா திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

   

இப்படியான நிலையில் படத்தின் ரீ ரிலீஸ் நேற்று சென்னையில் நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் கலந்து கொண்ட நடிகர் விஷால் மேடையில் பேசும் போது கைகள் நடுக்கத்துடன் பேச்சில் தடுமாற்றத்துடன் பேசியது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. விஷாலின் இந்த நிலைமைக்கு இயக்குனர் பாலா தான் காரணம்என்று பலரும் பேசி வந்தார்கள். நல்லா படத்துல நடிச்சுக்கிட்டு இருந்த பையன படம் எடுக்கலாம் என்று கூட்டிட்டு போயி இப்படி நாசம் பண்ணிட்டாரு. உண்மையிலேயே அவன் இவன் திரைப்படத்தில் மாறு கண் போன்று விஷால் நடிக்கவில்லை. நடந்தது என்னவென்றால் மாறு கண் மாதிரி நடிப்பதற்காக விஷாலுக்கு கண்ணில் ஆபரேஷன் செய்து அப்படி பண்ணிட்டாங்க.

   

 

இது போன்ற காட்சிகளை ஒரு மாதத்தில் முடிப்பதை விட்டுவிட்டு சுமார் இரண்டு வருடங்களுக்கு மேலாக கிராமத்திற்கு விஷாலை அழைத்துச் சென்று பாலா இப்படி பண்ணிட்டாரு. அதுக்கப்புறம் விஷால் நிறைய ட்ரீட்மென்ட் பார்த்தும் அதை சரி பண்ணவே முடியல. இன்னைக்கி அவருக்கு நரம்பு தளர்ச்சி தான் காரணம். அதனாலதான் மேடையில பேசக்கூட முடியாம அப்படியே தடுமாறுகிறார் என்றெல்லாம் பேசப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் பாலாவிடம் உங்கள் படத்தில் நடிச்சதால தான் விஷாலுக்கு உடம்பு சரி இல்லாமல் போனதா என்று கேட்கப்பட்டது . அதற்கு பதிலளித்த அவர், “இதுக்கு நான் என்ன பதில் சொல்றது டாக்டர் certificet வேணுனா வாங்கி கொடுக்கலாம். அது எப்படி கண்ணை பிடிச்சி தைக்க முடியும். இதெல்லாம் அவங்க அவங்களுக்கு தோணுறதை பேசுறாங்க. நாம கண்டுக்க கூடாது” என்று பேசியுள்ளார்.