இனி தமிழ்நாட்டில் இது நடக்காது… ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வரும் தனிச்சட்டம்… அமைச்சர் வன்னி அரசு அதிரடி அறிவிப்பு….!

By Nanthini on ஆனி 2, 2026

Spread the love

தமிழகத்தில் ஆணவப் படுகொலைகளைத் தடுப்பதற்காக வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரிலேயே தனிச்சட்டம் கொண்டு வரப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு நெல்லையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுதிப்படத் தெரிவித்துள்ளார்.

   

சாதியக் கொடுமைகளுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிராக அரசு எடுத்து வரும் தீவிர நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இச்சட்டம் அமையும் எனக் குறிப்பிட்ட அவர், சாதி ரீதியான மோதல்கள் மற்றும் பிரச்சினைகளைக் கையாள்வதற்கென்றே காவல்துறையில் ‘தனி போலீஸ் பிரிவு’ ஒன்று பிரத்தியேகமாக அமைக்கப்படும் என்றும் கூறினார். சமூக சமத்துவத்தை நிலைநாட்டவும், சாதி மறுப்புத் திருமணம் செய்து கொள்ளும் இணைகளுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கவும் இந்த அதிரடி நடவடிக்கைகள் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.