தமிழகத்தில் திட்டமிட்டபடி ஜூன் 4-ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளதால், மாணவர்களின் கோடை விடுமுறை இன்னும் இரண்டு நாட்களில் முடிவுக்கு வரவுள்ளது. ஜூன் மாதம் பள்ளி மற்றும் அலுவலகப் பணிகள் முழுவீச்சில் தொடங்கினாலும், இந்த மாதத்தில் கணிசமான விடுமுறை நாட்கள் காத்துக் கொண்டிருக்கின்றன. ஜூன் மாதத்தில் வரும் 4 வார இறுதி நாட்களைச் கணக்கிட்டால், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் என மொத்தம் 8 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதுதவிர, ஜூன் 26-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) முஹர்ரம் பண்டிகையை முன்னிட்டு அரசுப் பொதுவிடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளதால், அதனுடன் வார இறுதி நாட்களும் இணைந்து அந்த வாரத்தில் 3 நாட்கள் தொடர் விடுமுறை (வெள்ளி, சனி, ஞாயிறு) அமையவுள்ளது. இதன் காரணமாக, பள்ளித் தொடக்க மாதமான ஜூன் மாதத்தில் மட்டும் ஒட்டுமொத்தமாக 9 நாட்கள் சூப்பரான விடுமுறை தினங்கள் மக்களுக்குக் கிடைக்கின்றன.
