BREAKING: செந்தில் பாலாஜிக்கு செக் வைத்த கோர்ட்…! டாஸ்மாக் முறைகேடு வழக்கில் புது திருப்பம்…!!

By Devi Ramu on ஆடி 30, 2026

Spread the love

டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த முன்ஜாமீன் மனு சற்றுமுன் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் உருவாகியுள்ளதால், சட்ட நிபுணர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தீவிர அவசர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே, வழக்கமான நிபந்தனையின்படி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் இன்று ஆஜராகி கையெழுத்திட வேண்டிய செந்தில் பாலாஜி அங்குச் செல்லவில்லை எனக் கூறப்படுகிறது. முன்ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை அணுகுவதா அல்லது சட்டரீதியான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதா என்பது குறித்து அவர் தீவிரமாக ஆலோசித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.