தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள டாஸ்மாக் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகிய இருவரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். டாஸ்மாக் நிர்வாகத்தில் சட்டவிரோதமாகத் தலையிட்டு, முறைகேடான வசூல் வேட்டையில் ஈடுபட்டதாக இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே தவெக ஆட்சி கவிழ்ப்பு பேர வழக்கில் கைதாகி இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் இவர்கள் ஜாமினில் வெளியே வந்திருந்த நிலையில், தற்போது டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை எடுத்துள்ள இந்த உடனடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் மேலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
