“பனையூர் வாசல்ல செந்தில் பாலாஜி… எப்போ வேணாலும் அங்க போவாரு”… பரபரப்பை கிளப்பிய மதுரை MLA….!

By Nanthini on ஆடி 12, 2026

Spread the love

மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது பேட்டியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் வாசலில், தேவைப்பட்டால் செந்தில் பாலாஜி கூட போய் நிற்பார் என்று மிகக் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

மேலும், அனைத்துக் கட்சியின் கரை வேட்டிகளையும் அவர் எப்போதும் தனது மஞ்சள் பையிலேயே வைத்துக் கொண்டுதான் சுற்றுகிறார் என்று சாடிய முஸ்தபா, செந்தில் பாலாஜி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையில் அமைச்சராக இருந்தபோது செய்த ஊழல்கள் அனைத்தும் தற்போது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வரத் தொடங்கியுள்ளன என்றும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அதிரடிப் பேச்சு தற்போது சமூக வலைத்தளங்களிலும் அரசியல் வட்டாரத்திலும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.