டாஸ்மாக் நிறுவனத்தின் டெண்டர், மதுபான கொள்முதல் மற்றும் பார் உரிமம் வழங்குவதில் ரூ.1,000 கோடிக்கும் மேல் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டு முன்வைத்தது. இதன் தொடர்ச்சியாக, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் புதிதாக வழக்குப்பதிவு செய்து, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தொடர்ந்து, செந்தில் பாலாஜியின் இல்லம், டாஸ்மாக் அலுவலகங்கள் மற்றும் மதுபான ஆலைகள் உட்பட தமிழ்நாடு முழுவதும் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விடிய விடிய அதிரடி சோதனைகளை மேற்கொண்டு, முக்கிய ஆவணங்களைக் கைப்பற்றினர்.
இந்தச் சோதனைகளின் போது, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த செந்தில் பாலாஜியிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சுமார் 3 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தி, வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த முறைகேடு வழக்கு தொடர்பாக மேலும் விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகுமாறு அவருக்குச் சம்மன் அனுப்பப்பட்டது. அதன்படி, இன்று காலை 11 மணிக்கு அவர் விசாரணைக்காக அதிகாரிகளின் முன் ஆஜராக உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன்புத்தூரைச் சேர்ந்தவர் பூமிராஜா (39). இவருக்குச் செல்வராணி (35) என்ற மனைவியும் இரு…
அதிமுகவின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை, அக்கட்சியிலிருந்து விலகி விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்திருப்பது தமிழக…
மத்திய பிரதேச மாநில நர்சிங் கவுன்சிலின் இணையவழி பதிவு முறையில் நிலவும் பாதுகாப்பின்மையை அம்பலப்படுத்தும் விதமாக, என்எஸ்யுஐ மாணவர் அமைப்பின்…
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை விமான நிலையம் வந்தடைந்தபோது…
தவெக - பாமக கூட்டணி குறித்த தகவல்கள் வதந்தியே என்றும், விசிகவின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத சிலரே இத்தகைய…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தல்…