பெங்களூரு உத்தரஹள்ளியில் வசித்தவர் நேத்ராவதி. 34 வயதான இவருடைய கணவர் ஐந்து வருடங்களுக்கு முன்பு பிரிந்து சென்றுவிட்டார். இதனால் இவர் தன்னுடைய பதினைந்து வயது மகளுடன் வாழ்ந்து வந்தாலர், சிறுமி தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த 26ம் தேதி காலை வீட்டின் படுக்கை அறையில் சிறுமியின் தாய் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். குடும்ப தகராறு தூக்கிட்டு தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் கருதிய நிலையில் நேத்ராவதியின் அக்கா அனிதா காவல் நிலையத்தில் தங்கையின் சாவில் சந்தேகம் உள்ளது, அவர் இறந்த நாளிலிருந்து அவருடைய மகளை காணவில்லை என்று கூறியிருந்தார்.
இதனால் போலீசார் நேத்ராவதியின் மகளை தேட ஆரம்பித்தார்கள். அவர் அவருடைய தோழியின் வீட்டில் இருப்பதாக கூறப்பட்டது. அங்கு சென்ற போலீசார் அந்த சிறுமியை பிடித்து விசாரித்தார்கள். அப்போது அந்த பெண் 15 வயதான ஆண் நண்பர்கள் நான்கு பேருடன் சேர்ந்து தன்னுடைய தாயை கொலை செய்ததாக கூறியுள்ளார். இதனை அடுத்து அந்த பெண் மற்றும் ஆண் நண்பர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டு சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கொலையான நேத்ராவதியின் 15 வயது மகளுக்கு அவர் வயதைச் சேர்ந்த சிறுவனோடு காதலன் இருந்தது. 25ஆம் தேதி இரவில் நேத்ராவதி தூங்கியதும் அவருடைய மகள் காதலரை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். அப்போது காதலனுடன் இருந்த தன்னுடைய மகளை நேத்ராவதி அடித்துள்ளார். இதனால் கோபமடைந்த சிறுமி தன்னுடைய காதலன் அவருடைய நண்பர்களோடு சேர்ந்து தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டின் தலைநகரான டெல்லியில் உள்ள பரபரப்பான நேரு பிளேஸ் பகுதியில், தனியாக வந்த இளம் பெண் ஒருவரிடம் பாலியல் அத்துமீறலில்…
ஆந்திரப் பிரதேசம் நந்தியாலைச் சேர்ந்த தம்பதியினர், இணையவழி ஆன்லைன் முதலீட்டுத் திட்டங்களில் பணத்தை இழந்து ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக,…
அரியானா மாநிலம் குர்கானில், தனது மின்சார வாகனத்திற்கு மின்னூட்டம் செய்ய வந்த இளம் பெண் ஒருவருக்கு நேர்ந்த மோசமான அனுபவம்…
நேபாள நாட்டில் உள்ள 7,126 மீட்டர் உயரமுள்ள 'ஹிம்லுங் ஹிமால்' மலைப் பகுதியின் அடிவார முகாமில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில்…
அமராவதி மாவட்ட மகளிர் மருத்துவமனையின் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி அதிகாலை 2:50…
இந்தியாவில் மருத்துவக் கையுறைகள், உறைகள், மருத்துவக் குழாய்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்திக்கு இயற்கை ரப்பர் மற்றும் லேடெக்ஸ் மிக…