“1000 போட்டால் 2000 கிடைக்கும்” நான் கார் வாங்கிட்டேன்… விஜய் ரசிகர்னு சொல்லி நல்ல ஏமாத்திட்டான்… யூடியூபர் “கொடுவை அன்பு” மீது பரபரப்பு குற்றசாட்டு…!!

By Soundarya on தை 5, 2026

Spread the love
பிரபல யூடியூபராக அறியப்படும் 15 வயது சிறுவன் ‘கொடுவை அன்பு’, சட்டவிரோத பெட்டிங் செயலிகளை விளம்பரப்படுத்தி பண மோசடியில் ஈடுபட்டதாக எழுந்துள்ள புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. நடிகர் விஜய்யின் தீவிர ரசிகராகத் தன்னைக் காட்டிக்கொண்டு, குறுகிய காலத்தில் சுமார் 10 லட்சம் சந்தாதாரர்களைப் பெற்ற அவர், சமீபத்தில் தனது தாய்க்குப் புதிய தார் கார் ஒன்றை பரிசளிப்பதாக வீடியோ வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், தான் ஆன்லைன் பெட்டிங் ஆப்ஸ் மூலம் பெரும் பணம் சம்பாதித்ததாகக் கூறி, தனது ஃபாலோயர்களையும் அதில் முதலீடு செய்யத் தூண்டியுள்ளார்.
இவரது பேச்சை நம்பிப் பணத்தைப் முதலீடு செய்து இழந்த பலரும், இது ஒரு திட்டமிடப்பட்ட பண மோசடி எனச் சமூக வலைதளங்களில் குற்றம்சாட்டி வருகின்றனர். வயது முதிர்ந்தவர்கள் மற்றும் இளைஞர்களைக் குறிவைத்து இதுபோன்ற சட்டவிரோதச் சூதாட்டச் செயலிகளை விளம்பரப்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகும்.