சிங்கப்பூர் மெரினா பே சாண்ட்ஸ் வணிக வளாகத்தின் மொட்டை மாடியில், நபர் ஒருவர் பகிரங்கமாக மலம் கழிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2023-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன்முதலில் வெளியான இந்தப் புகைப்படம், தற்போது மீண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த நபர் மாநாட்டு மையத்தின் நுழைவாயில் அருகே உள்ள பொது இடத்தில் இச்செயலைச் செய்திருந்தது சிசிடிவி (CCTV) மற்றும் பொதுமக்களின் கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த அநாகரீகமான செயல் குறித்து மெரினா பே சாண்ட்ஸ் நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருவதோடு, சம்பந்தப்பட்ட நபர் யார் என்பதைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. சிங்கப்பூர் சட்டப்படி பொது இடங்களில் மலம் கழிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இது போன்ற பொது இட விதிமீறல்கள் மற்றும் சுகாதாரம் குறித்த புகார்களுக்கு சிங்கப்பூரின் தேசிய சுற்றுச்சூழல் முகமை விதிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறார்கள்.
