கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் வட்டார இயக்குநர் லதா, ரிஷிவந்தியம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் மீது மாவட்ட ஆட்சியரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகார் மனுவில், எம்.எல்.ஏ தன்னைத் தகாத வார்த்தைகளால் திட்டி மிரட்டல் விடுத்ததாக லதா குறிப்பிட்டுள்ளார். மேலும், வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகத் தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வருவதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக, “நீ சாதி பார்த்து வேலை செய்கிறாய்” எனத் தனது சாதியின் பெயரைக் குறிப்பிட்டு எம்.எல்.ஏ திட்டியதாகவும், இது தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் வட்டார இயக்குநர் லதா தனது புகாரில் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் கார்த்திகேயன் தரப்பிலிருந்து இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை.
நடக்க முடியாத தனது மாமனாரை மருமகள் ஒருவர் தன் தோளில் சுமந்து செல்லும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி தற்போது இணையத்தில்…
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் உள்ள தனியார் பள்ளியில், மூன்று வயது ப்ரீ-கேஜி மாணவன் ஆசிரியர் மற்றும் பள்ளி உதவியாளரால் தாக்கப்பட்ட…
மேற்கு வங்க மாநிலம் ஜார்கிராம் பகுதியைச் சேர்ந்த பிரபல பாம்பு பிடிப்பவரான ‘சர்பபந்து’ என்பவர், செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற மானசா…
ஆசை வார்த்தை கூறி சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய 55 வயது முதியவருக்கு, போக்சோ சிறப்பு நீதிமன்றம் கடுமையான…
மகாராஷ்டிரா மாநிலம் கோண்டியா மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் 35 வயதான வர்ஷா துர்கர் என்ற விமான நிறுவன ஊழியர் கொலை…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள சகேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், மனிதநேயமற்ற அலட்சியத்தால் ஒரு துயரச் சம்பவம்…