மதுரை காளவாசல் பைபாஸ் சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில், சுமார் 11 கிலோ தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. காதலியின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் திட்டமிட்டு, தனி ஒருவனாக இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்ட நிஷாந்த் என்பவரைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வந்தனர். கடந்த நான்கு நாட்களாகப் பல்வேறு ஊர்களுக்குச் சென்று போலீசாரின் பிடியில் சிக்காமல் தலைமறைவாக இருந்த நிஷாந்த், இறுதியில் காவல்துறையினரின் வலையில் சிக்கியுள்ளார்.
தர்மபுரியில் தனது நண்பர்கள் மூன்று பேரின் உதவியுடன், பெங்களூரு – சேலம் மார்க்கமாகச் செல்லும் தனியார் ஆம்னி பேருந்தில் நிஷாந்த் ஏறியுள்ளார். அப்போது டிக்கெட் கட்டணத்திற்கு மேல் கிளீனருக்குக் கூடுதலாக 500 ரூபாய் கொடுத்துவிட்டு, நண்பர்கள் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். பயணத்தின் போது, கிளீனரின் செல்போனை வாங்கி நிஷாந்த் யாருடனோ பேசியுள்ளார். அப்போது முகக்கவசத்தைக் (Mask) கழற்றிவிட்டு, “நான் நிஷாந்த் பேசுகிறேன்” என்று அவர் கூறியதைக் கேட்ட கிளீனருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்துக் கிளீனர் உடனடியாகப் பேருந்து ஓட்டுநரிடம் தகவல் தெரிவித்துள்ளார். நிஷாந்தை அடையாளம் கண்டுகொண்ட ஓட்டுநர், சற்றும் தாமதிக்காமல் அதியமான்கோட்டை காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கொடுத்தார். இதற்கிடையில், கழிவறைக்குச் செல்ல வேண்டும் எனக் கூறிப் பேருந்தை நிறுத்துமாறு நிஷாந்த் வற்புறுத்தியுள்ளார். ஆனால், சந்தேகமடைந்த ஓட்டுநரும் கிளீனரும் பேருந்தை நிறுத்த மறுத்ததுடன், பேருந்தின் கதவுகளைப் பூட்டிவிட்டு டீக்கடைக்குச் சென்றுள்ளனர்.
கதவு திறக்கப்படாததால் ஆத்திரமடைந்த நிஷாந்த் உள்ளே இருந்து கூச்சலிட்டுள்ளார். பின்னர் தப்பிக்கும் நோக்கில் ஓட்டுநர் இருக்கையின் ஜன்னல் வழியாக வெளியே குதித்துள்ளார். ஆனால், சரியான நேரத்தில் அங்கு விரைந்து வந்த காவல்துறையினர் நிஷாந்தை மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். பேருந்து ஓட்டுநர் மற்றும் கிளீனரின் சாதுர்யமான நடவடிக்கையால், பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைக் கொள்ளை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கியக் குற்றவாளி பிடிபட்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…