சமீபத்தில் அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவருடைய விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு அரசியலில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது. இந்நிலையில் செங்கோட்டையனை வைத்தே இன்னும் சில அதிமுக சீனியர்களுக்கு தவெக வலைவீசி இருப்பதாக கூறப்படுகிறது.
TVK விரித்த இந்த வலையில் பொள்ளாச்சி ஜெயராமன், வைத்திலிங்கம்(OPS தரப்பு), வெல்லமண்டி நடராஜன்(OPS தரப்பு) தற்போது சிக்கியிருக்கிறார்களாம். இவர்களுடன் தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் TVK ஈடுபட்டு வருவதாக பேசப்படுகிறது. இவர்கள் தவெகவுக்கு சென்றால் அதிமுக ஒருங்கிணைப்புக்கு மேலும் பின்னடைவு ஏற்படும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
