SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்… இன்று (டிச..1) முதல் இந்த சேவை கிடையாது… திடீர் அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 1, 2025

Spread the love

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வந்த mCASH எனப்படும் பணப்பரிவினை சேவையை டிசம்பர் 1 இன்று முதல் நிரந்தரமாக நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே இன்று முதல் ஆன்லைன் எஸ்பிஐ மற்றும் யோனோ லைட் செயலிகளில் mCASH மூலமாக பணம் அனுப்பவோ அல்லது பெறவோ முடியாது என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது. இந்த வசதியை இதுவரை பயன்படுத்தி வந்த வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கி பரிவர்த்தனைகளில் சில மாற்றங்களை எதிர்கொள்ள நேரிடும். mCASH என்பது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் யாருக்கும் பணம் அனுமதித்த ஒரு வசதியாகும். இதற்கு பயனாளரை முன்பே பதிவு செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

மொபைல் நம்பர் மற்றும் மின்னஞ்சல் ஐடியை மட்டும் பயன்படுத்தி பணம் அனுப்ப முடியும். சில அவசர தேவைகளுக்கு சிறிய தொகைகளை அனுப்ப இந்த வசதி பயனுள்ளதாக இருந்தது. இதனிடையே இந்த வசதி இன்று முதல் வாடிக்கையாளர்களுக்கு நிறுத்தப்படும் என்றும் அதற்கு பதிலாக பாதுகாப்பான மற்றும் மேம்பட்ட கட்டண முறைகளை பயன்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது . அதாவது இந்த சேவைக்கு பதிலாக வாடிக்கையாளர்கள் BHIM SBI Pay, IMPS, பிற டிஜிட்டல் முறைகளை பயன்படுத்த sbi வங்கி அறிவுறுத்தியுள்ளது.