“உழைத்தவர்களுக்கு இல்லை, வந்தவர்களுக்கு சீட்டா?” திமுக சீனியர்கள் போர்க்கொடி! ஸ்டாலினுக்கு புதிய நெருக்கடி..!!

By Soundarya on தை 25, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலினின் நன்மதிப்பைப் பெறுவதற்காக மாவட்ட அமைச்சர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பிற கட்சிப் பிரமுகர்களை திமுகவில் இணைக்கும் படலத்தில் தீவிரமாக இறங்கியுள்ளனர். குறிப்பாக, செல்வாக்கு மிக்க அதிமுக மற்றும் பிற கட்சி நிர்வாகிகளை இழுப்பதன் மூலம் தங்கள் செல்வாக்கை தலைமையிடம் நிரூபிக்க அமைச்சர்கள் முயன்று வருகின்றனர். இது கட்சிக்கு வலு சேர்ப்பதாகத் தோன்றினாலும், கள நிலவரப்படி பழைய நிர்வாகிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி, தஞ்சாவூர் உள்ளிட்ட தென் மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிமுகவிலிருந்து திமுகவுக்குத் தாவியவர்களுக்கு, வரும் தேர்தலில் போட்டியிட முன்னுரிமை அளிக்கப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தசாப்தங்களாகக் கட்சிக்காக உழைத்த தங்களைப் புறக்கணித்துவிட்டு, நேற்று வந்தவர்களுக்கு ‘சீட்’ கொடுப்பதை ஏற்க முடியாது எனப் பழைய நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்த உட்கட்சி மோதல் தேர்தலின் போது பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்பதால், அதிருப்தியில் உள்ள நிர்வாகிகளைச் சமாதானம் செய்ய திமுக தலைமை ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.