கரூர் துயர வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து, ஐகோர்ட் அமைத்த SIT குழு விசாரணை சிபிஐக்கு மாற்றப்படவுள்ளது. இதற்கான அதிகாரிகள் விரைவில் நியமிக்கப்பட உள்ளார்கள். மேலும், சிபிஐ விசாரணையை கண்காணிப்பதற்கு ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்து Sc உத்தரவிட்டுள்ளது.
மேலும் இந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தாமாக விசாரணைக்கு எடுத்தது ஏன்? என்று விளக்கம் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்ட நிலையில் அதை மீறுவதா? எனவும், எதையும் ஆய்வு செய்யாமல் தனி நீதிபதி, SIT விசாரணைக்கு உத்தரவிட்டது தவறு எனவும் சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது சிறப்பான உத்தரவு அல்ல. உச்சநீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி குழு கண்காணிக்கும் என்பதெல்லாம் சற்று மிகையாக உள்ளது. வழக்கு விசாரணையே இன்னும் தொடங்காத நிலையில் பாரபட்சம் என்பதற்கு இடமில்லை என்று மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் கருத்து தெரிவித்துள்ளார்.
