FLASH NEWS: மூத்த IAS அதிகாரி ராஜினாமா… அரசுக்கு அடுத்த அதிர்ச்சி… தமிழக அரசுத் துறைகளில் அடுத்தடுத்து அரங்கேறும் திருப்பங்கள்…!

By Nanthini on ஆடி 5, 2026

Spread the love

தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் (TNRERA) தலைவராகப் பொறுப்பு வகித்து வந்த மூத்த ஐஏஎஸ் அதிகாரி சிவ்தாஸ் மீனா திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடன் இணைந்து ஆணையத்தின் முக்கிய உறுப்பினர்களான சுப்பிரமணியம் மற்றும் சுகுமார் ஆகியோரும் தங்களது பதவிகளைத் துறந்திருப்பது ரியல் எஸ்டேட் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே சங்கர் ஜிவால், அபய் குமார் சிங், சுனில் குமார் போன்ற பல மூத்த உயர் அதிகாரிகள் அடுத்தடுத்து தங்களது பொறுப்புகளில் இருந்து விலகியிருந்த நிலையில், தற்போது சிவ்தாஸ் மீனா மற்றும் உறுப்பினர்களின் இந்த ஒட்டுமொத்த ராஜினாமா, ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் அதன் பின்னணியில் உள்ள நிர்வாகக் காரணங்கள் குறித்து பல்வேறு விவாதங்களையும் அடுத்தகட்ட பரபரப்பையும் உந்தித் தள்ளியுள்ளது.