தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அரசியல் கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தேனி மாவட்டம் கம்பம் தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட இரண்டு சீனியர் நிர்வாகிகளிடையே கடும் போட்டி நிலவி வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இந்த தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்எல்ஏ-வும், தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான கம்பம் ராமகிருஷ்ணன் மீண்டும் எம்எல்ஏ சீட்டை எதிர்பார்த்து நிற்கிறாராம்.
ஆனால், மற்றொரு சீனியர் நிர்வாகியான ஜெயக்குமாரும் கம்பத்தில் களத்தில் இறங்க களப்பணிகளையே தொடங்கிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், இந்த தொகுதி யாருக்கு? என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது.
