தமிழக வெற்றிக் கழகம் கடந்த 5ஆம் தேதி பொதுக்குழுவை நடத்தியது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆதவ் அர்ஜூனா தவெக தலைவர் விஜய்க்கு சிக்கலை ஏற்படுத்தி இருப்பதாக பத்திரிகையாளர் அய்யநாதன் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விஜய்க்கே தெரியாமல், அவரை ஆதவ் அர்ஜூனா பிரச்சனையில் இழுத்து விடுகிறார்.
இப்படி அவரை பேசுவதற்கு விஜய் எப்படி அனுமதிக்கலாம்?. கரூர் சம்பவம் நடந்ததுமே ஆதவ் அர்ஜுனா தலைமறைவாகிவிட்டார். பின்னர் பாஜக வழக்கறிஞர்கள் மூலம் பேசி, விஜய்யை சிக்க வைத்துவிட்டார். இத்துடன் விஜய்யின் அரசியலையும் ஆதவ் அர்ஜுனா முடித்து விட்டார்” என்றும் கூறியுள்ளார்.
