BREAKING: காங்கிரஸ் மூத்த தலைவர் சி.எஸ்.சுவாமிநாதன் காலமானார்… ஜோதிமணி எம்பி இரங்கல்..!!

By Soundarya on பங்குனி 9, 2026

Spread the love

முன்னாள் எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சி.எஸ்.சுவாமிநாதன் (80) காலமானார். 1991-ம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் எனப் பல முக்கியப் பொறுப்புகளை வகித்து மக்கள் பணியாற்றியவர்.

இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கரூர் எம்.பி ஜோதிமணி, சுவாமிநாதனின் எளிமையான பண்பும், நேர்மையும் அவரை ஒரு சிறந்த மக்கள் தலைவராக மாற்றியதாகக் குறிப்பிட்டுள்ளார். இவரது மறைவு காங்கிரஸ் கட்சிக்கும், புதுக்கோட்டை மாவட்ட மக்களுக்கும் ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.