நாட்டு மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. குறிப்பாக மூத்த குடிமக்களுக்கு பொருளாதார மற்றும் சமூக பாதுகாப்பு அளிக்கும் வகையில் பல திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. அதன்படி ஏழைகள், பொருளாதாரத்தில் நலிவடைந்த தனி நபர்கள், அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்கள் ஆகியோருக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்கும் வகையில் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மத்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் கடந்த 2016 ஆம் ஆண்டு மூத்த குடிமக்களுக்காக பிரத்தியேகமாக இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பொருளாதார பாதுகாப்பு வழங்குவதை நோக்கமாகக் கொண்ட இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் மாதம் தோறும் ஒருவர் ஐந்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாக பெற முடியும். இந்த திட்டத்தில் ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்வதன் மூலமாக ஓய்வுக்கு பிறகு மாதாந்திர ஓய்வூதியத்தை பயனாளர் பெறலாம். அமைப்புசாரா துறையில் இருக்கின்றவர்களின் எதிர்கால பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு நிதி உதவி வழங்கும் இந்த திட்டத்தில் 60 ஆண்டுகளுக்குப் பிறகு டெபாசிட் செய்பவர்கள் ஓய்வூதியம் பெறலாம். இந்த திட்ட மூலம் முறையான ஓய்வூதிய திட்டம் இல்லாத சிறு வணிகர்கள், சுய தொழில் செய்பவர்கள் மற்றும் தினசரி ஊதியம் பெறுபவர்கள் இந்த திட்டத்தின் பலனை பெற முடியும்.

18 முதல் 40 வயதிற்கு உட்பட்ட யார் வேண்டுமானாலும் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் டெபாசிட் செய்து கொள்ள முடியும். குறைந்த அளவில் ஏழு ரூபாய் முதலீட்டில் இந்த திட்டத்தில் ஒருவர் இணைந்து கொள்ளலாம். அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் தினமும் 7 ரூபாய் வீதம் மாதம் தோறும் 210 ரூபாய் முதலீடு செய்யலாம். இதன் மூலமாக மாதந்தோறும் 60 வயதை அடையும் போது ஓய்வூதியமாக ஐந்தாயிரம் ரூபாய் பெறலாம்.

இந்த திட்டத்தில் 40 வயதில் ஒருவர் இணைந்தால் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் பெறுவதற்கு 1,454 ரூபாய் ப்ரீமியமாக செலுத்த வேண்டும். பிரீமியம் செலுத்துவதை பொறுத்து ஓய்வூதிய பெறலாம். மேலும் இந்தத் திட்டத்தில் 42 ரூபாய் முதல் 210 ரூபாய் வரை மாதம் தோறும் செலுத்தலாம். அடல் பென்ஷனா யோஜனா திட்டத்தின் கீழ் தபால் அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை தனியார் வங்கிகளில் கணக்கு தொடங்கி டெபாசிட் செய்து கொள்ளலாம். சிறுவயதில் இருந்து சேமித்து நீண்ட கால பலனை பெற அடல் பென்ஷன் யோஜனா திட்டம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்.
