தமிழ் சினிமாவில் ஜெயம் ரவியாக அறியப்பட்டவர் சமீபத்தில் தனது பெயரை ரவி மோகன் என மாற்றிக் கொண்டார். பெயர் மாற்றத்திற்கு பிறகு இவருடைய நடிப்பில் இறுதியாக வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படத்தை கிருத்திகா உதயநிதி இயக்கி இருந்த நிலையில் இதில் நித்தியா மேனன் நடித்திருந்தார். இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனைத் தொடர்ந்து சுதா கும்பரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் ரவி மோகன் நடித்து வருகின்றார். முதல் முறையாக இந்த படத்தில் அவர் வில்லனாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
![]()
இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ரவி மோகன் புதிய அவதாரம் ஒன்றை எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பராசக்தி படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நிலையில் தற்போது ரவி மோகன் இயக்குனர் அவதாரமும் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது யோகி பாபு நடிப்பில் ரவி மோகன் படம் ஒன்றை இயக்க உள்ளதாகவும் அதன் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
![]()
இதனிடையே கணேஷ் பாபு இயக்கத்திலும் ஒரு படத்தில் ரவி மோகன் நடித்து வருகின்றார். கவினியின் டாடா மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான இவர் தனது இரண்டாவது படைப்பாக ரவி மோகன் நடிப்பில் கராத்தே பாபு என்ற படத்தை இயக்குகிறார். சமீபத்தில் வெளியான இப்படத்தில் மிரட்டலான அறிமுக வீடியோ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. அது மட்டுமல்லாமல் இப்படத்தில் அரசியல்வாதியாக ரவி மோகன் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
