போலீஸாரும், கண்டக்டரும் இனி விசில் அடிக்க முடியாது… தவெக சின்னம் குறித்து செங்கோட்டையன் பகீர் பேச்சு..!!

By Soundarya on தை 24, 2026

Spread the love

தவெக-வுக்கு விசில் சின்னம் கிடைத்தது பற்றிப் பேசிய செங்கோட்டையன், “விசில் சின்னத்தைப் பார்த்த பிறகு தமிழக அரசியலில் அனைவரும் மாறிவிட்டனர். விசில் என்பது அன்றாட வாழ்வில் மிகவும் முக்கியமானது. இனிமேல் போலீஸாரையும், பேருந்து நடத்துநர்களையும் விசில் அடிக்க வேண்டாம் என்று சொல்லப்படும் அளவுக்கு அதன் முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அந்தளவுக்கு அந்தச் சின்னம் மக்கள் மனதில் பதிந்துவிட்டது. இவ்வளவு முக்கியமான விசில் சின்னத்தை இறைவன் பார்த்துப் பார்த்து விஜய்க்கு அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த பிறகு செங்கோட்டையன் ஆற்றி வரும் இந்தப் பேச்சு, தொண்டர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் இந்த ‘விசில்’ சின்னம் தமிழகம் முழுவதும் ஒலிக்கும் என்றும், இது மாற்றத்திற்கான ஆரம்பம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.