தமிழக அமைச்சரவை விரிவாக்கத்தின்போது கடைசிநேர திருப்பமாக செங்கோட்டையனிடம் இருந்த நிதித்துறை பறிக்கப்பட்டு, அவருக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இந்த அதிரடி மாற்றம் அவரது முழு ஒப்புதலின்பேரிலேயே நடந்துள்ளதாக தமிழக வெற்றிக் கழக (தவெக) உட்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போது அரசு கடுமையான நிதிச்சுமையில் சிக்கித் தவித்து வரும் சூழலில், நிதித்துறையைக் கையாள்வது தேவையற்ற அரசியல் விமர்சனங்களையும் நெருக்கடிகளையும் உருவாக்கக்கூடும் என்று செங்கோட்டையன் முதல்வர் விஜய்யிடம் முன்கூட்டியே விவரித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தேவையற்ற சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்காகவே, அனுபவம் வாய்ந்த அவருக்குப் பொறுப்பான மாற்றுத் துறையாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வழங்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
