தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சி தயாராகி வருகின்றது. குறிப்பாக அதிமுகவின் மூத்த நிர்வாகியான செங்கோட்டையன் கட்சியில் இணைந்த பிறகு விஜய்க்கு கூடுதல் பலம் சேர்ந்துள்ளது. மாற்றுக் கட்சியினர் பலரும் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைந்த வண்ணம் உள்ளனர். இதனிடையே இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செங்கோட்டையன், நமது கழகம் மிக சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. உலக நாடுகளில் தலைசிறந்த தலைவராக தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் இருப்பார். அனைவருக்கும் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதற்கு நம்முடைய கழகம் உழைக்கின்றது.
தமிழக வெற்றிக்கழக விருப்பம் மனு தொடர்பான முடிவுகளை தலைவர் மட்டுமே அறிவிப்பார். எதிர்க்கட்சியும் ஆளும் கட்சியும் வாக்குறுதிகளை வழங்கினாலும் நிறைவேறாமையால் போராட்டங்கள் தொடர்கின்றன. பொங்கல் பண்டிகைக்கு பிறகு பெரிய தலைவர்கள் தமிழக வெற்றிக்கழக கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. தலைவரை முதலமைச்சராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களை கூட்டணியில் வரவேற்றி வாழ்த்துவோம். விரைவில் யார் யாருடன் கூட்டணி அமைப்பார்கள் என்பது தெரியும். தற்போது ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு பகிர்வு என்பது குறித்து தகவல் இல்லை என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
