காலையிலேயே இபிஎஸ்-க்கு பயங்கர ஷாக்… செங்கோட்டையன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு… அனல் பறக்கும் அரசியல் களம்…!

By Nanthini on கார்த்திகை 29, 2025

Spread the love

தமிழகத்தில் நாளுக்கு நாள் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தேர்தல் களமும் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. ஒவ்வொரு கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தொகுதி பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இணைந்தது பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது. அதிமுகவில் இருந்த நீக்கப்பட்ட செங்கோட்டயன் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்று அனைவரும் காத்திருந்த நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக அவர் விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு கட்சியில் முக்கிய பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வராகவும் பொதுச் செயலாளராகவும் முன்மொழிந்த தன்னை ஈபிஎஸ் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியதாக செங்கோட்டையன் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இபிஎஸ் தலைமையில் ஒரு தேர்தலிலாவது அதிமுக வெற்றி பெற்றதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். டிசம்பர் மாதத்தில் தமிழக வெற்றிக்கழகம் தலைமையில் பிரம்மாண்ட கூட்டணி அமையும் என்றும் இன்னும் சில முன்னாள் அமைச்சர்களும் விஜயுடன் இணைவார்கள் என்றும் செங்கோட்டையன் கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.