வங்க கடலில் இன்று சென்யார் புயல் உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் தமிழகத்தில் கனமழை பெய்ய உள்ளது. மறுப்புரம் தமிழக அரசியலிலும் புதிய புயல் உருவாகியுள்ளது. தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படும் செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் சென்னைக்கு வந்துள்ளார்.
இன்னும் சற்று நேரத்தில் அதாவது 11 மணியளவில் அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று மாலையே விஜய்யை அவர் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் நாளை கட்சியில் இணைய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நொடிக்கு நொடி தமிழக அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது.
