“ஐயோ அம்மா யாராவது வாங்கலே”… தோழியின் அறைக்கு வாலிபருடன் சென்ற கல்லூரி மாணவி… திடீரென கேட்ட சத்தம்… இறுதியில் நடந்த பயங்கரம்…!

By Nanthini on கார்த்திகை 26, 2025

Spread the love

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கிராமத்தை சேர்ந்த தேவி ஸ்ரீ (21) என்ற இளம் பெண் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு புகழ்பெற்ற கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் கல்லூரி விடுதியில் தங்கி பயின்று வந்த நிலையில் நேற்று காலை தனக்கு பழக்கமான பிரேம்வர்தன் என்ற வாலிபருடன் பெங்களூரு வடக்கு தாலுகாவின் அருகே உள்ள பகுதியில் தனது தோழியின் அறைக்கு சென்றுள்ளார். அறையில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது தேவி ஸ்ரீயின் தோழி வெளியே சென்று இருந்தார். மாணவி அறையில் பிரேம் வர்தன் திடிரென்று தேவி ஸ்ரீயை கொடூரமாக கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இது தொடர்பாக தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரத்த வெள்ளத்தில் கிடந்த இளம் பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிறகு நடத்தப்பட்ட விசாரணையில் மாணவியை அந்த வாலிபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து கொலை வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள பிரேம் வர்தனை தேடி வருகின்றனர். இளம்பெண்ணை அவர் எதற்காக கொலை செய்தார் அவர்களுக்கு இடையே என்ன பிரச்சனை என்பது குறித்து தெரியவில்லை. தற்போது அந்த வாலிபரை கைது செய்தால்தான் கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.