அதிமுக முன்னாள் அமைச்சராக இருந்த செங்கோட்டையன் சமீபத்தில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கொங்கு மண்டலத்தை உள்ளடக்கிய மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளராகவும் அவரை நடிகர் விஜய் நியமித்துள்ளார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்தபோது செங்கோட்டையன் கூறியதாவது, ஜனநாயகன் படம் வரும் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. தமிழ்நாட்டில் ஜனநாயகம் சுக்குநூறாக உடைக்கப்பட்டு இருக்கிறது. அதை காப்பதற்கு அந்த படம் வருகிறது. 2026ம் ஆண்டு விஜய்தான் தமிழ்நாட்டின் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாறு படைக்கிறார். அந்த காலம் வரும் என்று கூறினார்.
இதை பார்த்த பலரும் எம்ஜிஆர் காலத்தில் எம்எல்ஏவாக இருந்து எம்ஜிஆர் புகழ் பாடியவர். ஜெயலலிதா காலத்தில் அமைச்சராக இருந்து அதிமுகவின் முக்கிய நிர்வாகியாக வலம் வந்தவர். இப்போது தவெகவில் இணைந்து விஜயின் படத்துக்கு பிரமோசன் செய்யும் ஒரு நிலைக்கு வந்துவிட்டாரே? விட்டால் படத்துக்கு போஸ்டர் ஒட்டுவாரோ என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.
