எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி மயிலாடுதுறை மீனவர்கள் ஒன்பது பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்டு படக்குகளும் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் கைதான மீனவர்கள் காரைநகர் கடற்கரை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
நேற்று நெடுந்தீவு அருகே 11 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்திருந்தது. தற்போது மீண்டும் இன்று மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த பிரச்சனை நீண்ட காலமாக உள்ளதால் நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக அரசுக்கு மீனவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.
