எங்களுடைய எதிரி யார் தெரியுமா..? வெளிப்படையாக போட்டுடைத்த செங்கோட்டையன்…!!

By Soundarya on மாசி 8, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) நிர்வாகக் குழுத் தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக வெற்றிக்கழகத்தின் ஒரே எதிரி தி.மு.க.தான். பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.தி.மு.க. எங்களுக்கு ஒரு பொருட்டல்ல, அது ஒரு கட்சியே அல்ல. தமிழ்நாடு அரசியல் களத்தில் த.வெ.க.வுக்கு எதிரி தி.மு.க.தான் என்று திட்டவட்டமாகக் கூறினார்.

தமிழக வெற்றிக்கழகம் சார்பில் தேர்தலில் போட்டியிட ஒரே நாளில் 10,000 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர். நேரில் விருப்ப மனு அளிக்க வந்து 15,000 பேர் திரும்பச் சென்றதால், ஆன்லைனில் விருப்ப மனு அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. த.வெ.க. கூட்டணிக்கு சில கட்சிகள் வருவார்கள்; குறிப்பாக தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம் கிடைக்காதவர்கள் த.வெ.க.விற்கு வருவார்கள் எனவும், குறுகிய காலக்கட்டத்தில் கூட்டணி அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.