Actor Ajith Kumar

எப்போதும் நீங்கள் என் முன்மாதிரி… அட்ரினல் வேகத்தை நான் உணர்ந்தேன் – நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட பதிவு!

By Elango on மாசி 8, 2026

Spread the love

நடிகர் அஜீத்குமார் இப்போது துபாயில் இருந்து வருகிறார். தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். நேற்று அபுதாபிக்குச் சென்ற நடிகர் சிவகார்த்திகேயன் கார் ரேஸ் ட்ராக்கில் ஒரு நாள் முழுவதும் அஜீத்குமாருடன் செலவிட்டு இருக்கிறார். அந்த ஒரு நாள் எப்படி இருந்தது என்பது குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியாக ஒரு பதிவை செய்திருக்கிறார்.

இதுகுறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது, தூய்மையான பேரார்வம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு மற்றும் மன உறுதி – இதை நேரில் அனுபவித்தேன். அந்த அட்ரினலின் வேகத்தை உணர்ந்தேன். ஒரு ஊக்கமளிக்கும் நபருடன் கழித்த ஒரு ஊக்கமளிக்கும் நாள். என் அன்பான AK சார், நான் எப்போதும் உங்களை முன்மாதிரியாகக் கருதுகிறேன் என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார்.