தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதன்படி அதிமுக பாஜக உடன் கூட்டணி அமைத்துள்ள நிலையில் இ பி எஸ் நிலைப்பாடு சரியாக இல்லாததால் கட்சியிலுள்ள நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகுவதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் அதற்கு ஐந்தாம் தேதி பதில் கிடைக்கும் என அவரே நேற்று கூறியிருந்தார்.
இபிஎஸ் உடன் மோதல் நீடித்து வரும் நிலையில் சசிகலாவை செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவை நான் சந்தித்து பேசவில்லை. தவறான தகவல் பரப்பப்படுகிறது என்று செங்கோட்டையன் பதிலளித்தார். மேலும் அதிமுகவில் இருந்து வேறு கட்சிக்கு (TVK) மாறுகிறீர்களா என்ற கேள்விக்கு ஐந்தாம் தேதி பதில் கிடைக்கும் என்றும் கூறியுள்ளார்.
