தவெகவில் செங்கோட்டையன்… அதிமுகவை கவிழ்க்க பாஜக போட்ட திட்டம்… உண்மையை அவிழ்த்து விட்ட பிரபலம்… சற்றுமுன் பரபரப்பு அறிக்கை…!

By Nanthini on கார்த்திகை 27, 2025

Spread the love

தமிழக அரசியல் களம் நொடிக்கு நொடி பரபரப்பாக இருக்கும் நிலையில் இன்று செங்கோட்டையன் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது. செங்கோட்டையன் விஜய் கட்சியில் இணைந்துள்ளதற்கு அரசியல் பிரபலங்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றன. அதன்படி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு வெளியிட்டுள்ள பதிவில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைவதற்கு பின்னால் பாஜக தான் இருக்க வேண்டும்.

ஏனென்றால் அதிமுகவிலிருந்து கட்சிப் பதவி பறிக்கப்பட்ட உடன் டெல்லிக்குச் சென்று அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனை கேட்க தான் வந்ததாக வெளிப்படையாக அவரே கூறினார். தற்போது தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைவதும் அமித்ஷாவின் ஆலோசனை தானா என்ற அச்சம் எழுகிறது. எடப்பாடி பழனிச்சாமியை தடுமாற வைத்து பாதிக்கு பாதி தொகுதிகளை பெறுவது தான் பாஜகவின் உத்தி. ஒரு பக்கம் நடிகர் விஜய் மூலமாக திமுக எதிர்ப்பை வலுப்படுத்தவும் மறுபக்கம் அதிமுகவையே பலவீனப்படுத்துவதும் தான் பாஜகவின் சதி.

   

தேர்தலுக்குள்ளாகவே எடப்பாடி பழனிச்சாமி கட்சிக்குள்ளே தனிமைப்படுத்தப்படுவார். அதன்பிறகு பாஜக முழுமையாக அதிமுகவை கையகப்படுத்தும். அதற்கான உத்திகளை பாஜக தொடங்கிவிட்டது. நடிகர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா தலைமையை ஏற்றுக் கொண்டவர்களுக்கு நடிகர் விஜயை ஏற்றுக் கொள்வதில் எந்த மனதடையும் இருக்காது என்பதையே செங்கோட்டையன் தமிழக வெற்றிக்கலகம் கட்சியில் இணைவதை காட்டுகின்றது என்று அவர் பதிவிட்டுள்ளது தற்போது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.