பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன், சத்யபாமா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளார்கள். நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்.
அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளித்த விஜய், அவர்களுக்கு சிறப்பு விருந்து கொடுக்க ஏற்பாடு செய்துள்ளார். இதற்கிடையில், புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன், காரைக்கால் அதிமுக செயலாளரும், முன்னாள் MLA வுமான ஹசானாவும் இன்னும் சற்று நேரத்தில் தவெகவில் இணையவுள்ளனர்.
