கதையை முடிக்க சொன்ன செங்கோட்டையன்… ரகசியத்தை கூறிய பிரபலம்… அடுத்த பரபரப்பு…!

By Nanthini on புரட்டாதி 8, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. அதே சமயம் கூட்டணி குறித்த பேச்சு வார்த்தையும் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இதனிடையே அதிமுகவில் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வரும் நிலையில் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து அதிரடியாக விலகி வருகிறார்கள். சமீபத்தில் செங்கோட்டையன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால் இபிஎஸ் மீது நிர்வாகிகள் பலரும் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த 1972 ஆம் ஆண்டு நடந்த தர்மபுரி வாசாத்தி விவகாரத்தில் அன்றைய வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் தன்னை கொலை செய்ய போனில் கூறியதாக CPIM சண்முகம் பேட்டி அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது வைரலாகியுள்ளது. அந்தப் பேட்டியில், செங்கோட்டையன் பேசிய ஆடியோ வெளியாகவில்லை என்றால், அந்த விஷயம் எங்களுக்கே தெரிந்திருக்காது என கூறியுள்ளார். தற்போது இந்த செய்தி வெளியாகி புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.