உத்திரபிரதேசம் மாநிலத்தில் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் முகேஷ் ராஜ்புத் சகோதரி ரீனா ராஜ்புத்துக்கும் காஸ்கஞ்ச் மாவட்ட நபர் ஒருவருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. ஏற்கனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் திருமணம் ஆகி சில காலங்களில் மாமனார் மற்றும் கொழுந்தனாரால் வீணா தொடர்ந்து கொடுமைப்படுத்தப்பட்டார். இரண்டு பெண் குழந்தைகளை பெற்றதால் இவருக்கு கொலை மிரட்டல்களும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த குடும்ப பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அதாவது ரீனா குடித்துக் கொண்டிருந்தபோது அவருடைய மாமனாரும் கொழுந்தனாரும் அதனை ரகசியமாக வீடியோ எடுக்க முயற்சித்துள்ளனர். ஆத்திரமடைந்த இருவரும் அவரை நடு ரோட்டில் இழுத்து வந்து கொடூரமாக தாக்கியுள்ளனர். மாமனார் கட்டையாலும் கொழுந்தனார் இரும்பு கம்பியாலும் தாக்கியதில் ரீனா படுகாயம் அடைந்தார். இந்த தாக்குதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
भाजपा सांसद की बहन का आरोप है नहाते समय ससुर और देवर वीडियो बना रहे थे! जब मैंने विरोध किया तो गालियां देने लगे। पिटाई शुरू कर दी !!
यूपी के फर्रुखाबाद से भाजपा सांसद मुकेश राजपूत की बहन को उनके ससुर और देवर ने बीच सड़क पर बेरहमी से पीटा है। कासगंज में घर के बाहर ससुर ने बहू को… pic.twitter.com/qyFMDyk72e
— MANOJ SHARMA LUCKNOW UP🇮🇳🇮🇳🇮🇳 (@ManojSh28986262) September 7, 2025
