கோவை விமான நிலையத்தில் 2026 ஜனவரி 5 அன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக வெற்றிழகம் கட்சியின் முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சருமான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்பட விவகாரம் குறித்துப் பேசினார். அதாவது விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எப்போது வெளியாகும் என்று மக்கள் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்தப் படத்தை யாராவது தடுக்க நினைத்தால், அது அவர்களைத்தான் பாதகமாக பாதிக்கும். தடுப்பவர்களுக்கு இது வலு சேர்க்காது” என்று எச்சரித்தார்.
மேலும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், சிறுமிகள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார். 2026-ல் தமிழகத்தில் நேர்மையான ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டுள்ளதாகவும், அவர் நிச்சயம் முதலமைச்சராகப் பதவியேற்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
