கேரள மாநிலத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் சென்னை சென்ட்ரல் பகுதியில் இருக்கும் பிரபல லாட்ஜ் ஒன்றில் சமீபத்தில் ஒரு அறையை எடுத்து தங்கி இருந்தார். சென்னையை அடுத்த பெரிய பாளையத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அவர் செவிலியர் ஆக பணியாற்றி வருவதாக தெரிகிறது. இதனிடையே அந்த லாட்ஜில் வேலை செய்து வந்த ஒடிசாவை சேர்ந்த தனஞ்செய்பதி (19) என்ற ஊழியர் ஹோட்டல் அறையில் இளம் பெண் குளிக்கும்போது ஜன்னல் வழியாக வீடியோ எடுத்துள்ளார்.
இதனை சற்றும் எதிர்பார்க்காத அந்த பெண் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கூச்சலிட்டார். அதன் பிறகு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியில் வந்த அவர் அந்த வாலிபரின் செல்போனை பிடுங்கி ஆய்வு செய்துள்ளார். ஆனால் அதற்குள்ளாக அவர் குளிக்கும் போது எடுத்த வீடியோவை அந்த நபர் அகற்றி விட்டதாக தெரிகிறது. இருந்தாலும் அவருடைய செல்போனில் வேறு சில பெண்கள் குளிக்கும் போது எடுத்த வீடியோக்கள் பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
