சற்றுமுன்… இபிஎஸ்-க்கு செங்கோட்டையன் கொடுத்த அடுத்த ஷாக்… செம குஷியில் விஜய்…!

By Nanthini on மார்கழி 31, 2025

Spread the love

தமிழகத்தில் 2021 ஆம் ஆண்டு தேர்தலுடன் ஒப்பிடும்போது 2026 சட்டமன்றத் தேர்தல் பல திருப்பங்களை எதிர்கொண்டு வருகின்றது. குறிப்பாக விஜயின் அரசியல் வருகை என்பது பலரையும் கதி கலங்க வைத்துள்ளது. விஜய்க்கு கட்சி ஆரம்பித்தது முதலே மக்கள் மத்தியில் ஆதரவு கூடிக் கொண்டே செல்கிறது. விஜய்க்கும் அவருடைய ரசிகர்களுக்கும் அரசியல் அனுபவம் இல்லை என்று விமர்சனம் அனைவராலும் முன்வைக்கப்பட்டாலும் இதனை முறியடிக்கும் வகையில் 50 ஆண்டுகால அரசியல் அனுபவம் வாய்ந்த நபரான செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தமிழக வெற்றி கழகம் கட்சியில் இணைந்து விஜய்க்கு பலத்தை கூட்டினார். இவர் கட்சியில் இணைந்த கையுடன் இன்னும் சில முக்கிய அமைச்சர்கள் விஜய் கட்சியில் சேர உள்ளனர். அதற்கான பணிகளை நானே மேற்கொள்வேன் என்று கூறி பரப்பரப்பை கிளப்பினார்.

இந்நிலையில் பொங்கலுக்கு முன்பு தமிழக வெற்றி கழகம் கட்சியில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் இணைவார்கள் என்று செங்கோட்டையன் கூறி இருந்தார். இதற்கான திரை மறைவு வேலைகளில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏக்கள் இடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை ஸ்மெல் செய்த இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.