சமீபமாக வி.கே.சசிகலா வெளியிட்டு அறிக்கையில்,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், புரட்சித் தலைவரால் தொடங்கப்பட்டு புரட்சித்தலைவியால் வளர்க்கப்பட்டு, ஏழை எளிய மக்களுக்காக உருவாக்கிய இயக்கம் இது.
இன்னும் 100 ஆண்டுகள் ஆனால் கூட, இந்த இயக்கம் மக்களுக்காகவே இயங்கும். எந்த சக்தியாலும் அழிக்க முடியாது என்பதை, கழக மூத்த முன்னோடியும் கழக சட்டமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் செங்கோட்டையன் நிரூபித்திருக்கிறார்.
பல இக்கட்டான சூழல்களில் உடன் இருந்து கலகம் ஒன்று பட வேண்டும் என செங்கோட்டையன் போராடினார். இதைத்தான் நானும் வலியுறுத்துகிறேன். அன்பு சகோதரர் செங்கோட்டையன் போல உண்மையான தொண்டர்கள் இருக்கும் வரை, திமுக என்ன செய்தாலும் அவர்கள் எண்ணம் ஈடேறாது. அவர்கள் சதித்திட்டத்தை முறியடிக்க கழகத் தொண்டர்கள் ஒன்றிணைைய வேண்டும். இரு பெரும் தலைவர்கள் உருவாக்கிய இந்த இயக்கம் ஒரு காட்டாறு வெள்ளம் போன்றது. இதை யாரும் தடுக்க முடியாது. எனவே திமுக என்ற தீய சக்தியை, நாம் ஒன்று சேர்ந்து தடுப்போம். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான அரசை வீட்டிற்கு அனுப்புவது உறுதி. ஒன்றுபட்ட வலிமைமிக்க அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் தமிழகத்தின் ஆட்சி மாற்றம் ஏற்பட வழிவகை செய்யும்.
ஒன்று படுவோம்! வென்று காட்டுவோம்! நாளை நமதே! வெற்றி நிச்சயம்! பேரறிஞர் அண்ணா நாமம் வாழ்க! புரட்சித் தலைவர் நாமம் வாழ்க! புரட்சித் தலைவி அம்மா நாமம் வாழ்க! நன்றி வணக்கம்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…