ஆட்டம் ஆரம்பம்..! செங்கோட்டையன் இனி த.வெ.க.காரர்… அதிஉயர் பொறுப்பை தூக்கி கொடுத்த விஜய்…!!

By Soundarya on கார்த்திகை 27, 2025

Spread the love

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் முன்னிலையில், செங்கோட்டையன், சத்யபாமா உள்பட 10-க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்துள்ளார்கள். நிர்வாக குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு, கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களுக்கு அமைப்பு செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் அமைப்புச் செயலாளராகவும் KAS நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மேலும்  செங்கோட்டையனின் ஆதரவாளரான சத்யபாமாவும், இன்று  காலை முதல் ஆளாக தவெக தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்திருந்தார்.  தவெகவில் முதல் ஆளாக தன்னை இணைத்துக்கொண்டார். மேலும் அவருடைய ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர்.