“என்கூட கடைசி வரை இருப்பியா…?” காதலியை அழைத்த 64 வயது முதியவர்…. கடைசியில் நடந்த கொடூர சம்பவம்…!!

By Devi Ramu on கார்த்திகை 27, 2025

Spread the love

ராமநாதபுரம் மாவட்டம், சிக்கல் பகுதியைச் சேர்ந்த கார்மேகம் (64), என்பவருக்கு தனது மனைவி இறந்த பிறகு, பரமக்குடியைச் சேர்ந்த கஸ்தூரி (49) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, ஆறு ஆண்டுகளுக்கும் மேலாக லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்துள்ளார். அரசு பொதுப்பணித்துறையில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற கார்மேகம், தனக்குக் கிடைத்த முழு ஓய்வூதியத் தொகையையும் கஸ்தூரியிடம் கொடுத்து, கடைசிவரை துணையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த நிலையில், கஸ்தூரிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு ஏற்பட்டதால், கார்மேகத்தின் தொலைபேசி அழைப்புகளை அவர் புறக்கணிக்கத் தொடங்கினார். இதனால் கோபமடைந்த கார்மேகம், தன்னுடன் வாழ வேண்டும் அல்லது கொடுத்த பணத்தைத் திரும்பக் கொடுக்க வேண்டும் என்று சண்டையிட்டுள்ளார். பிரச்சனையைத் தீர்ப்பதற்காக கஸ்தூரியை ராமேஸ்வரத்தில் தான் தங்கியிருந்த அரசு பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகை அறைக்கு அழைத்துள்ளார்.

   

அங்கே, இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த கார்மேகம் திடீரென கத்தியை எடுத்து கஸ்தூரியின் கழுத்தில் குத்தினார். இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்த கஸ்தூரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, கார்மேகம் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்துக்குச் சென்று சரணடைந்தார், போலீசார் அவரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.