BREAKING: தவெக – அதிமுக கூட்டணியில் விரிசலா..? SP வேலுமணி தரப்புக்கு ஷாக் கொடுத்த செங்கோட்டையன்..!

By Swetha on வைகாசி 18, 2026

Spread the love

அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடமளிப்பதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை என தவெக அமைச்சர் KAS கூறியுள்ள கருத்து, அக்கட்சியின் முக்கிய நிர்வாகியான எஸ்பி வேலுமணி தரப்பிற்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக தவெக மற்றும் அதிமுக இடையே திரைமறைவில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், ஆட்சி அதிகாரத்தில் பங்கு தர சம்மதம் தெரிவிக்கப்பட்டதாகவும் அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தச் சூழலில், அமைச்சர் KAS-ன் இந்த அதிரடி மறுப்பு, அதிமுக தரப்பு நம்பியிருந்த அதிகாரப் பகிர்வு கணக்குகளைத் தலைகீழாக மாற்றி, அவர்களுக்குப் பெருத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளது.

இதன் பின்னணியில் முதல்வர் விஜய்யின் தீர்க்கமான அரசியல் வியூகம் இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதிமுகவை அமைச்சரவையில் சேர்த்துக் கொண்டால், அது தேவையற்ற அரசியல் விமர்சனங்களுக்கும், ஆளுநரிடம் புகார்கள் மற்றும் சட்ட ரீதியான வழக்குகளைச் சந்திப்பதற்கும் வழிவகுக்கும் என விஜய் கருதுகிறார். புதிய ஆட்சியில் ஆரம்பத்திலேயே இதுபோன்ற சிக்கல்களில் சிக்கித் தன் அரசியல் நற்பெயரைக் கெடுத்துக்கொள்ள அவர் விரும்பவில்லை. முதல்வர் விஜய்யின் இந்தத் தெளிவான முடிவின் வெளிப்பாடாகவே, அமைச்சர் KAS மூலம் அதிமுகவினருக்கு அமைச்சரவையில் இடமில்லை என்ற செய்தி தற்பொழுது பகிரங்கமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.