அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கெனவே போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் , நேற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பசும்பொன்னுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்நிலையில் இதுகுறித்து செங்கோட்டையன் கூறுகையில், “அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து நாளை காலை 11 மணிக்கு கட்சி அலுவலகத்தில் விரிவாக பேசுவேன்” என்று தெரிவித்துள்ளார்.
